தீபாவளி பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில், பேருந்து குறித்த முக்கிய தகவல்..!

Mahendran

புதன், 15 அக்டோபர் 2025 (10:16 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பயணிகளுக்காக, தாம்பரம் மாநகர காவல்துறையினர் முக்கிய போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.
 
தீபாவளி விடுமுறையை தொடர்ந்து காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களிலிருந்து, கூடுதலாக புறநகர் இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
 
பயணிகள் சாலை நெரிசலை தவிர்க்க இந்த சிறப்பு உள்ளூர் ரயில் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம்பரம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு சென்னை திரும்புவோர், நெரிசலற்ற பயணத்திற்காக கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓஎம்ஆர் வழித்தடங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் பயணிகளின் வசதிக்காக, கிளாம்பாக்கம்  பேருந்து முனையத்திலிருந்து 2,092 சிறப்புப் பேருந்துகள், அக்டோபர் 16, 2025 முதல் அக்டோபர் 19, 2025 வரை இயக்கப்படவுள்ளன.
 
சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்