பள்ளிகளில் சாதி பெயரை கேட்கவில்லை..! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (15:37 IST)
தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் சாதி பெயர் கேட்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அனைத்திலும் பயிற்று மொழியாக தமிழ் உள்ளது. சில பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் என இருவகை பயிற்று மொழி வகுப்புகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக 54 அரசு பள்ளிகள் தமிழ் பயிற்று மொழி வகுப்புகளே இல்லை என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “சில அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகள் சாதி பெயர் கேட்கப்படுவதாக கூறப்படுவது குறித்து பேசிய அவர் “பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது. பள்ளிகளில் எம்.பி.சி, பி.சி. என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்