நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மக்களுக்காக பணியில் ஆக்டிவாக இயங்கி வருகிறது.
சமீபத்தில், சென்னை, பனையூரில், விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி, இளைஞரணி, மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நேற்று வேலூரில் உள்ள சில கிராமங்களில் விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்பட்டதாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் விரைவில் தளபதி மினி கிளினிக்கை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகர் தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், விரைவில் தமிழகம் முழுக்க உள்ள மருத்துவர் அணியின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெறவுள்ளது.
அதில், தொகுதி வாரியாக இலவச மருத்துவ கிளினிக் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.