வருத்தம் தெரிவிக்காவிட்டால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்: அண்ணாமலைக்கு ஜெயகுமார் எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (12:52 IST)
பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
அண்ணாமலை தனது கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுவதை அவர் நிறுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 
 
நடக்காத விஷயத்தை சொல்லி அண்ணா பெயரை களங்கப்படுத்த கூடாது என்றும் அண்ணா மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் முத்துராமலிங்கத் தேவர் மீது அதிமுக நன்மதிப்பு கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறது என்றும்  அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்