அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகுது மழை.. வானிலை அறிக்கையால் பொதுமக்கள் நிம்மதி..!

Siva
புதன், 8 மே 2024 (08:44 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் 20 மாவட்டங்களுக்கும் மேலாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் கோடை மழை ஆங்காங்கே பெய்த நிலையில் இன்று திடீரென சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்ததால் குளிர்ச்சியான தட்பவெப்பம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆற்காடு, வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை கிண்டி, மாம்பலம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதே போல் மதுரவாயில், அம்பத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து உள்ளதாகவும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவுயதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்