நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

Webdunia
சனி, 8 மே 2021 (16:22 IST)
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊரை நோக்கி செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்து நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ரயில் நிலையத்துக்கும் செல்வதற்கு வசதியாக நாளை சிறப்பு மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது 
 
இதனை அடுத்து நாளை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்