மெட்ரோவுக்காக ராயப்பேட்டை கோவில்கள் இடிக்கப்படுகிறதா? நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்..!

Siva
ஞாயிறு, 7 ஜூலை 2024 (10:35 IST)
மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ராயப்பேட்டையில் உள்ள சில கோவில்கள் இடிக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது 
 
ஆலயம் காப்போம் என்ற அறக்கட்டளையின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராயப்பேட்டை ஒயிட் சாலையில் உள்ள இரண்டு கோயில்களை இடிக்கும் திட்டம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு இருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.
 
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் மெட்ரோ ரயில் தரப்பில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தில் ராஜகோபுரத்தை நகர்த்தும் திட்டம் இருப்பதாகவும்   மெட்ரோ ரயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் அல்லது எதிர்ப்புறமாகவோ மாற்றினால் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
 
இந்நிலையில் கோவில் நுழைவாயிலை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு அல்லது எதிர் புறம் மாற்றினால் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து ஆய்வு செய்து வரும் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்