இன்று முதல் அனல்காற்று… 98 டிகிரி வெப்பநிலை… – எச்சரிக்கை விடுக்கும் சூரியன் !

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (12:24 IST)
தமிழகத்தில் கோடையை முன்னிட்டு வெய்யில் கொளுத்துகிறது. இந்நிலையில் இன்றுமுதல் 12 மாவட்டங்களில் அனல்காற்று வீச இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் கடுமையாக உள்ளது. பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வேறு வர இருக்கிறது.

இதனையடுத்து வெப்பநிலை குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய 12 மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். எனவும் வெப்பநிலை 98.6 டிகிர் செல்சியஸ் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இன்னும் பீதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்