இந்த மாவட்டங்களில் , 6, 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும்! வானிலை மையம் எச்சரிக்கை!

திங்கள், 4 மார்ச் 2019 (13:30 IST)
வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் அனல் காற்று வீசும் என கொங்கு மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
கடந்த ஆண்டு தமிழகத்தில்  வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனது. இதனால்  நீர் நிலைகள் பல ஊர்களில் வறண்டு காணப்படுகிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் முன்பே பல ஊர்களில் வெயில்  பயங்கரமாக கொழுத்தி வருகிறது. தற்போது மார்ச் மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பல ஊர்களில் 100 டிகிரி வெப்பநிலை காணப்படுகிறது. மக்கள் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.


 
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 6, 7ம் தேதிகளில் சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும். தமிழகத்தில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலைய அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்