அடுத்த 4 நாட்கள்... பாத்து பத்திரம்: வார்னிங் விடும் சென்னை வானிலை!
திங்கள், 21 ஜனவரி 2019 (16:54 IST)
தமிழகத்திற்கு அதிக மழை பொழியும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கஜா புயல் வந்து டெல்டா மாவட்டங்கல்ளை சிதைத்து சென்றது. அப்படி இருந்தும் இந்த ஆண்டு மழையின் அளவு 24% குறைவுதான். குறிப்பாக சென்னையில் பெரிதாக மழையே இல்லை.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அளவுக்கு அதிகமகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவடங்களை தவிர மற்ற பகுதிகளில் பனியின் அளவு குறையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்சமாக 29 டிகிரி வெப்பநிலையும், குறைந்த பட்சம் 29 டிகிரி வெப்பநிலையும் நிலவுமாம்.