உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்!- ஸ்டாலின் டுவீட்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (15:11 IST)
விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கனார். இவர் முன்னாள் முதல்வர் காமாராஜர் படித்த  சத்ரிய வித்யா சாலா என்ற பள்ளியில் படித்தவர் ஆவார்.

மெட்ராஸ்  மாகாணத்தை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி  கோரிக்கை வைத்து, 76 நாட்கள்  உண்ணாவிரதம் இருந்து  உயிரிழந்த தியாகி சங்கரலிங்கனாரின் 63 வது நினைவு  நாள் இன்று.

இந்த நிலையில்  தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பல அரசியல் கட்சித்தலைவர்கள் அவருக்கு  மரியாதை செய்து வருகின்றனர்.

ALSO READ: முதல்வர் ஸ்டாலின் சொந்தக் கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி
 

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில், தாய்த் தமிழ்நாட்டுக்கு #தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி உண்ணாநிலை இருந்து உயிர் ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்!

அவரது தியாகத்தைப் போற்றுவோம்!

சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்து உறுதி அளித்தபடி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் பேரறிஞர் அண்ணா.

#வாழ்க_தமிழ்நாடு! எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு என்று பெயர் 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர்!

 
ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! என்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்