மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து மதுரை அருகே நிறைவேற்றப்பட உள்ள டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு ஒன்றை அளித்தார் அதன் பின்னர் அவர் தனது சமூக வலைதளத்தில் மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் மாண்புமிகு கிஷன்ரெட்டி அவர்களைச் சந்தித்து, மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் "டங்க்ஸ்டன் சுரங்கம்" அமைப்பதைக் கைவிடக் கோரி இன்று மனு ஒன்றை அளித்தேன்.