விஜய்யுடன் கூட்டணியா? எனக்கு தெரியாது என்று பதிலளித்த திருமாவளவன்.. மாறுகிறதா கூட்டணி?

Siva

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (11:19 IST)
எதிர்காலத்தில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமையுமா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு "எனக்கு தெரியாது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டி அருகே மாபெரும் மாநாட்டை நடத்தினார். அதன் பிறகு அவர் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தகம் வெளியீடு நிகழ்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

விஜய் அரசியலுக்கு வந்து இந்த இரண்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை அவர் ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கவோ அல்லது ஒரு பெரிய கட்சியுடன் விஜய் கட்சி கூட்டணி அமைக்கவோ வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

அப்போது "விஜய் கட்சியுடன் கூட்டணியா?" என்ற கேள்விக்கு அவர் "தெரியாது" என்று பதிலளித்தார். மேலும், எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கும் "தெரியாது" என்றும், விஜய்யின் அரசியல் வருகையை தான் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தார். அவருடைய இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்