தமிழ்ப் பொண்ணுதான்... இது வெறும் பார்லிதான் - பியர் குடித்துக்கொண்டே மீரா மிதுன் பேட்டி

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (10:09 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீராமிதுன் தன்னுடைய நண்பர்களோடு பியர் சாப்பிட்டுக்கொண்டே பேட்டி அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3வது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் வெறுப்பை சம்மதித்து கடைசியில் அசிங்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். இதனால் இவர் வெளியே வந்த பிறகும் மக்கள் இவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர். காரணம், சேரன் மீது இவர் சுமத்திய அந்த அபாண்டமான பொய் தான். இதையடுத்து வெளியே வந்ததும் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார்.

அதையடுத்து இப்போது தனது நண்பர்களுடன் பியர் குடித்துக் கொண்டே ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தமிழ்ப் பெண்ணாக இருந்துகொண்டு பியர் குடிக்கலாமா ?’ என்ற கேள்விக்கு ‘ ஏன்யா இப்படி எல்லாத்துக்கும் தமிழ்ப் பொண்ண இழுக்கிறீங்க… இது வெறும் பியர்தான்… அதுவும் பார்லியால் செய்யப்பட்டது’ எனக் கூறியுள்ளார். இதுபோல ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பின் தொடர்பாளர்களின் பலரின் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்