நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (14:25 IST)
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனுக்கள் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மீரா மிதுனை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் தன்னை நம்பி அதிக தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் தான் வாய்தவறி தெரியாமல் பட்டியலினத்தவர் குறித்து பேசி விட்டதாகவும் கூறி மீரா மிதுன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்