இந்தி பதில் அளிப்பது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது! – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:54 IST)
மத்திய அரசுக்கு பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து எம்.பி சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை “மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பினால் ஆங்கிலத்தில்தான் பதில் கடிதம் அனுப்ப வேண்டும். இந்தியில் கடிதம் அனுப்புவது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது” என கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்