மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம்.. பக்தர்களின் 'ஹர ஹர சிவா' முழக்கம்

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:32 IST)
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது என்பதும் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் கோவில் தேர் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பக்தர்கள் ஹர ஹர சிவா என்று விண்ணை பிளக்கும் வகையில் முழக்கமிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாசி வீதிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் தேரை வடம் பிடித்து பக்தர்கள் உற்சாகமாக இழுத்து வருகிறார்கள் என்பதும் இந்த தேரோட்ட விழாவுக்கு பக்தர்களை வருகை அதிகம் இருக்கிறது என்பதால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை காலை வைகை ஆற்றில் நடைபெற உள்ளதை அடுத்து நாளை இன்னும் அதிகமான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் பொதுமக்கள்.. தாம்பரம் அருகே போக்குவரத்து நெரிசல்..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்