மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் உற்சாகம்..!

Siva

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:42 IST)
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கும் நிலையில் பக்தர்கள் உற்சாகமாகியுள்ளனர். மேலும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் எந்தெந்த தேதியில் நடைபெற உள்ளன என்பதை குறித்த முழு தகவல்களும் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.
 
ஏப்ரல் 12: காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் கொடியேற்றம்
 
ஏப்ரல் 19:  தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் 
 
ஏப்ரல் 20: திக் விஜயம் மற்றும் மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல்
 
ஏப்ரல் 21; தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.
 
ஏப்ரல் 22:  கள்ளழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை 
 
ஏப்ரல் 22:  மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெறும்.
 
ஏப்ரல் 23: தீர்த்தவாரி விழா
 
ஏப்ரல் 23:  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம்
 
ஏப்ரல் 24: தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் 
 
ஏப்ரல் 25:  மோகினி அவதாரத்தில் அழகரின் திருவிளையாடல் 
 
ஏப்ரல் 26: அழகர் மலைக்கு புறப்படுகிறார். அப்பன் திருப்பதியில் விடிய விடிய திருவிழா நடைபெறும்.
 
ஏப்ரல் 27: அழகர் இருப்பிடம் வந்து சேருவார். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்