அதிமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். தற்போது அந்த பகுதியில் தலையில் தொப்பி அணிந்தபடி அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தினகரனின் விசுவாசிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தினகரனின் தலையில், அவரின் சின்னமான தொப்பியை வைப்பது போல் போட்டோஷாப் வேலை செய்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டனர்.
சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்?.. உங்கள் கண்ணிற்கு அப்படி தெரியுது. ஆனால், எங்க கண்ணிற்கு இப்படித்தான் தெரிகிறது. தினகரன் தலையில் ஜெ. கல்லைப் போடுவது போல் போட்டோ ஷாப் வேலை செய்து சமூக வலைத்தளங்களில் உலவ விட்டுள்ளனர்.