மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க உத்தரவு!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (17:42 IST)
மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்கவும் மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து சென்னை மருத்துவ பதிவு சட்டமும் விதிகளும் மூன்று மாதங்களுக்குள் திருத்தப்படும்  என தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்