மே 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு..!

Siva
புதன், 8 மே 2024 (13:05 IST)
மே 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதை அடுத்து மே 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அந்த விடுமுறையை ஈடு செவிய வகையில் மே 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த விழாவின்போது காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா மலர் கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளட்டவை கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது

இந்த கண்காட்சியை காண்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 126 ஆவது மலர் கண்காட்சி மே 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளதை அடுத்து மே 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா உத்தரவிட்டுள்ளார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்