நீலகிரி தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு; அரசியல் கட்சி முகவர்கள் அதிர்ச்சி..!

Siva

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:49 IST)
நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்ததாக வெளியாக தகவலால் அரசியல் கட்சி முகவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,.

ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என கூறினார். மேலும் 20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது,

நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக ஏ ராஜா போட்டியிட்டார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல் முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன், மற்றும் நாம் தமிழர் சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர் என்பதும் கடந்த 19ஆம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்