ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்: போலீசை பார்த்ததும் தப்பித்து ஓடிய பெண்கள்

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (07:31 IST)
ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. மார்ச் 24 ஆம் தேதி முதல் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும் இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நாளை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பால், காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் ஊரடங்கு நேரத்தில் திறக்கக்கூடாது என்றும் அதை மீறி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மாநில அரசுகள் எச்சரித்து வருகிறது
 
இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை மீறி திருச்சி உறையூரில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வந்ததாகவும், அதில் ஆண்கள் பெண்கள் ஒருசிலர் சென்று மசாஜ் செய்து வந்ததாகவும் அப்பகுதி காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழைந்து சோதனை செய்தபோது இரண்டு பணிப் பெண்கள் மற்றும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மசாஜ் சென்டரில் இருந்ததை கண்டு அவர்களிடம் விசாரணை செய்து கொண்டிருந்தனர்.
 
இது குறித்து விசாரணை செய்து கொண்ட போது அங்கு பணி புரிந்து வந்த பெண்கள் திடீரென  தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த மசாஜ் சென்டரை சீல் வைத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் திருச்சி நகரின் மையப் பகுதியில் மசாஜ் சென்டர் இயங்கிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்