இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், திருமணமான ஐந்து நாட்களில் தனது மனைவியை அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீதரன், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிரியா என்பவரிடம் பழகினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
குடும்பத்தினர் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஸ்ரீதரன் தனது மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் காவல்துறை விசாரணையில் ஸ்ரீதரன் தனது மனைவியுடன் வாழ முடியாது என கூறிவிட்டு மீண்டும் ராணுவத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.