மத்திய பிரதேச மாநிலத்தில், தனது மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவருக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று கணவர் வாதம் செய்த நிலையில், அவரது வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.
குடும்ப நல நீதிமன்றம், மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையாக ₹4,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் பேரில், ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல், வேறொருவர் மீது அன்பு, பாசம் கொண்டிருந்தால், அதற்கு பெயர் கள்ளக்காதல் இல்லை என்றும் நீதிபதி கூறினார்.
கணவரின் சொற்ப வருமானம், இடைக்கால ஜீவனாம்ச தொகையை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது என்றும் கூறியவர், மனுதாரர் தனது மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்ச தொகையை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.