ஒருவருக்குத்தான் தாலி கட்ட முடியும், ரெண்டு பேருக்கு எப்படி தாலி கட்டுவது? மன்சூர் அலிகான்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (04:22 IST)
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நாளை முதல் புதிய படங்களை வெளியிடவில்லை என்ற போராட்டத்தை அறிவித்தது. இந்த போராட்டம் குறித்து கருத்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:



 
 
யாராவது ஒருத்தருக்குத்தான் தாலி கட்ட முடியும், ரெண்டு பேருக்கு எப்படி தாலி கட்டுவது? ஒன்று ஜிஎஸ்டி வரியை விதியுங்கள், அல்லது மாநில அரசின் கேளிக்கை வரியை விதியுங்கள், ரெண்டையும் விதித்தால் எப்படி திரையுலகம் தாக்கு பிடிக்கும். இதற்காகத்தான் இந்த போராட்டம்
 
இன்றைக்கு தமிழக அமைச்சர்கள் தான் கேலிக்கூத்தாக பேசி வருகின்றனர். எனவே கேளிக்கை வரி என்பது அமைச்சர்களுக்குத்தான் பொருந்தும். உதாரணத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையே எடுத்துக்கொள்ளுங்களேன்.... ‘சுதா... நீங்க யாரும்மா... பரதநாட்டியமா?' என்றெல்லாம் கேட்டு கர்நாடகப் பாடகி சுதாரகுநாதன் போன்ற ஒரு கலைஞரை அவமானப்படுத்துகிறார். ஒரு துறையில் உள்ள சாதனை படைத்த மூத்த கலைஞரைப் பற்றிக்கூட சரிவரத் தெரிந்துகொள்ளாமல், தப்புத்தப்பாக பெயர் சொல்லி மேடையிலேயே அவமானப்படுத்துகிறார். கொஞ்சமாவது பொறுப்புணர்வு இருக்கிறதா? அடுத்தவர்களை மதிக்கத் தெரியவேணாமா? 
 
அடுத்த நாளே ஒல்லியாகணும்னா சைவ உணவு சாப்பிடுங்கள்; உடம்பு இளைத்துவிடும் என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கேலிக்கூத்துகள்... இதற்குத்தான் வரி போடவேண்டும். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்