இன்று முதல் மீண்டும் தியேட்டர்கள் ஸ்டிரைக்! ஸ்பைடர், கருப்பன் கதி என்ன?

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (05:55 IST)
திரையரங்குகளுக்கு தமிழக அரசு இரட்டை வரிவிதிப்பு செய்துள்ளதால் இதனை எதிர்த்து இன்று முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கால்வரையின்றி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இதனால் கடந்த வாரம் வெளியான ஸ்பைடர், கருப்பன் உள்பட பல படங்களின் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது



 
 
தமிழகத்தில் ஏற்கனவே ஜிஎஸ்டி வரிவிதிப்பின்படி 28% வரிவிதிக்கப்பட்டுள்ளதால் சினிமா கட்டணங்கள் ரூ.150க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
இதன் படி தமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 30%-ல் இருந்து 10%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழி புதிய திரைப்படங்களுக்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களுக்கு 7 சதவிகிதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 14 சதவிகிதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் கேளிக்கை வரி குறைக்கப்பட்டு இருப்பினும் தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பால், தியேட்டர்களில் டிக்கெட் மேலும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரியுடன் இந்த கேளிக்கை வரியும் கட்ட வேண்டிய நிலை இருப்பதால் இந்த இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்