மக்களிடம் நிதி கேட்பதற்குப் பதில் இந்த தங்கத்தைப் பயன்படுத்தலாமே! மோடிக்குக் கடிதம் !

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (18:16 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடை கேட்டுள்ள மோடிக்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சூப்பர் ஐடியா கொடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனாவுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரம் இறங்குப் பாதையில் சென்று கொண்டு இருந்தது. இப்போது அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. பழைய நிலைமைக்கு நாம் திரும்பி வரவே பல ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் நிவாரண நிதி பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரிகால் சோழன் என்பவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகள் வசம் இருக்கும் தங்கம், வைரம் மற்றும் வைடூரியம் ஆகிய நகைகளை ஏலம் விட்டு அதன் மூலம் நிதி திரட்டலாம்’ எனக் கூறியுள்ளார்.

கரிகால சோழன் சொல்வது ஏலம் விட சட்டத்தில் இடம் இருக்கிறது என சட்ட வல்லுனர்களும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்