ஆட்சியரை செருப்பால் அடிக்க முயன்றதால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (12:32 IST)
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் ஆசியா மரியம் கலந்துக்கொண்டார்.


 


அப்போது, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டிருந்த ஆட்சியரின் அருகில் வந்த ஒருவர், ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி ஆட்சியரை தாக்க முயன்றார். இதை பார்த்த, அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி, நல்லிபாளையம் காவல்நிலையத்தில், ஒப்படைத்தனர்.

பின்னர், காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபரின் பெயர் ஆறுமுகம் என்பதும், அவர் ராசிபுரம் அடுத்துள்ள கட்டநாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்