காதலியின் அந்தரங்க புகைப்படங்களை தந்தைக்கு அனுப்பிய இளைஞர்! அதிர்ந்த குடும்பம்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:13 IST)
தனது காதலைப் பிரித்த காதலியின் தந்தைக்கே அவரின் அந்தரங்க படங்களை அனுப்பி மிரட்டியுள்ளார் இளைஞர் ஒருவர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற தூத்துக்குடி இளைஞரும் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படித்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டதால் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது அவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தாருக்கு தெரியவர இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் தந்தையிடம் பிரச்சனை செய்த தேவேஸ்வருடனான காதலை முறித்துகொண்டுள்ளார் அந்த பெண். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் காதலியுடன் தான் இருக்கும் புகைப்படம் மற்றும் அந்தரங்க புகைப்படங்களை அந்த பெண்ணின் தந்தைக்கே அனுப்பியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியான பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தூத்துக்குடியில் உள்ள தேவேஸ்வரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்