சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பி கிரேட் திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.
இதில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக் சொல்லி படத்தைத் தடை செய்ய சொல்லி சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை இணையத்தில் இருந்து நீக்கவேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழுவை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர் மனுதாரராக இணைத்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இரண்டாம் குத்து படடத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.