திருச்சி வங்கியில் 16 லட்சம் கொள்ளை – பெரம்பலூரில் சிக்கிய திருடன் !

சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:16 IST)
திருச்சியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 16 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த நபர் நான்கு நாட்களுக்குப் பிறகு பெரம்பலூரில் சிக்கியுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிட்டி யூனியன் வங்கி உள்ளது. இந்த வங்கிதான் அந்தப்பகுதில் உள்ள ஏடிஎம் எந்திரங்களுக்கு  லோகி கியாஸ் ஏஜென்சி என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் பணம் நிரப்பி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல வங்கியில் இந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு பணம் நிரப்பப்பட்டு அனுப்பப்பட இருந்தது.

ஆனால் அங்கிருந்த 16 லட்சம் வைக்கப்பட்டு இருந்த பையை மர்மநபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இது சம்மந்தமாக சிசிடிவி கேமராவில் பார்த்தும் அந்த மர்மநபரை நான்கு நாட்களாக அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில் பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரோடு பயனித்த நபர் ஒருவர் லாட்ஜ் தேடி அலைந்துள்ளார். ஆனால் அவர் மரன போதையில் இருந்ததால் எந்த லாட்ஜிலும் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் போதையில் அவர் ஆட்டோவிலேயே மயங்கியுள்ளார்.

இதனால் அவர் மேல் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் முருகையா அவரிடம் இருந்த பெட்டியைத் திறந்து பார்த்ததில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்துள்ளது. அதில் கட்டு கட்டாக பணம் இருந்ததும் உடனடியாகப் போலிஸாருக்குத் தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்துக் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஸ்டீபன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 15.7 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்