ஒரே நேரத்தில் அருள்பாலிக்கும் 2 அத்திவரதர்கள்: பக்தர்கள் மகிழ்ச்சி
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (16:46 IST)
திருச்சி கைலாச நாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள இரண்டாவது அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரை லட்சக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க இயலாதவர்களுக்கு அத்திவரதர் திருச்சியில் அருள்பாலிக்கிறார். திருச்சி ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாச நாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் இன்று முதல் (08.08.2019) 10 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நின்றகோலத்தில் பக்தர்களுக்கு நின்றகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருச்சியில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.