கடைசியாக ஆசையை நிறைவேற்றிக்கொண்ட நடராஜன்!

புதன், 14 அக்டோபர் 2020 (13:04 IST)
சேலத்தைச் சேர்ந்த நடராஜன் தன்னுடைய பந்துவீச்சில் தோனியை அவுட் ஆக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தமிழ் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட வீரர்களாக நடராஜனும், வருண் சக்கரவர்த்தியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணம். யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் வாங்கியுள்ள நடராஜன் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் தனது வாழ்நாள் ஆசைகளுள் ஒன்றை அவர் சாதித்துள்ளார்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்னர் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நடத்திய கலந்துரையாடலில் தோனியின் விக்கெட்டை வீழ்த்துவது எனது வாழ்நாள் கனவுகளுள் ஒன்று எனக் கூறியிருந்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்