ராதே ஷ்யாம் படக்குழுவினர் வெளியிட்ட அப்டேட்! அழகுப் பதுமை பூஜா ஹெக்டே!

புதன், 14 அக்டோபர் 2020 (11:00 IST)
நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்ந் நேற்று இந்த படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திர அறிமுகம் செய்யப்பட்டது. இந்த படத்தில அவர் பிரேரனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவரது புகைப்படம் ஒன்றும் வெளியானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்