மகாத்மா காந்தியின் தனிச்செயலாளர் காலமானார்: பாஜக இரங்கல்

Webdunia
புதன், 5 மே 2021 (13:48 IST)
தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களிடம் தனிச் செயலாளராக பணிபுரிந்த தமிழர் கல்யாணம் என்பவர் காலமானார் 
 
இதனை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி அவர்களின் தனிச் செயலாளராக செயல்பட்டதுடன் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் பெரியவர் கல்யாணம். அவர் தனது 95வது வயதில் காலமானார் என்ற செய்தி நமக்கெல்லாம் மிகுந்த வேதனையை தருகிறது
 
மகாத்மா காந்திக்கு பிறகு எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் தலைவர்களிடமும் தொடர்பில்லாமல், சமூக சேவை பணிகளில் மட்டும் ஈடுபட்டு மகாத்மா காந்தியின் சிந்தனைகளை, அவரோடு வாழ்ந்த அனுபவங்களை இதயத்தில் ஏந்தி வாழ்ந்து மறைந்த அவருக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்
 
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்