பசுக்களை பாதுகாக்க உதவி மையம் அமைப்பு! – உத்தரபிரதேச அரசு உத்தரவு!

Webdunia
புதன், 5 மே 2021 (13:34 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பசுக்களை பாதுகாக்க உதவி மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்சிஜன் வசதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க மாவட்டம்தோறும் உதவி மையங்களை அமைக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம்தோறும் உள்ள அனைத்து கோசாலைகளிலும் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்