ரயில் பயணிகளே கவனிங்க! ரயில்கள் ரத்து மற்றும் நேரம் மாற்றம்! – விவரம் உள்ளே!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (08:44 IST)
ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் வழி செல்லும், புறப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட சில ரயில்கள் சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்களின் நேரம், புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை – செங்கோட்டை (06663) இடையே காலை 11.30 மணிக்கு புறப்படும் கட்டண பாசஞ்சர் ரயிலும், மறுமார்க்கமாக செங்கோட்டை – மதுரை (06664) இடையே காலை 11.50 மணிக்கு புறப்படும் கட்டண பாசஞ்சர் ரயிலும் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் (16868) டிசம்பர் 5 முதல் 10ம் தேதி வரையிலும், டிசம்பர் 12 தொடங்கி 15ம் தேதி வரையிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

ராமேஸ்வரம் – மதுரை கட்டண பாசஞ்சர் ரயில் (06654) இன்று (டிசம்பர் 1) முதல் டிசம்பர் 31 வரை காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு புறப்படும். இந்த மாதத்தின் வியாழக்கிழமைகளில் இந்த ரயில் இயங்காது.

மதுரை – கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 7ம் தேதி மதுரையில் இருந்து காலை 5.30 மணிக்கு பதிலாக 6.30 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்