பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்கள் மாயம்! – தேடும் சுகாதாரத்துறை!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (11:36 IST)
பிரிட்டனில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை வந்த சிலர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் புதிய வீரியமிக்க கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து மதுரை வந்த 80 பேரில் 76 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீத 4 பேரை தனிமைப்படுத்த அவர்களது முகவரியை அணுகியபோது அவர்கள் தவறான முகவரியை அளித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் மாயமான 4 பேரை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்