பிரிட்டன் பயணிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா! – சமூக பரவலாகுமா?

ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (08:57 IST)
புதிய வகை கொரோனா பரவுவதால் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீரியமிக்க புதிய கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என 2,391 பேரின் பட்டியலை தயாரித்து தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படாததால் சமூக பரவலாகுமா என்பது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்