8 மணி நேர ஷிப்ட்; 10% கூடுதல் சம்பளம்! – காவலர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (15:47 IST)
தமிழகத்தில் காவல்துறைக்கு தனி ஆணையம் அமைக்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் பணி ஒழுங்கு செய்தல் குறித்து கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.

அதில், காவலர்களுக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், காவலர்களுக்கு 8 மணி நேர வேலை முறையில் மூன்று தனி ஷிப்ட்களில் வேலை பார்த்தல், குறைந்தபட்சம் 10% கூடுதல் ஊதியம் வழங்க தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்