மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 8 பேருக்கு சிகிச்சை!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:52 IST)
மதுரையில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு 18 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 54 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முதல் கொரோனா பலி இதுவாகும்.

இந்நிலையில் மதுரையில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த இந்த 8 பேர் தோப்பூர் காசநோய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்