தீபாவை எதிர்த்து மாதவன் களமிறங்க பல கோடி பேரம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (11:41 IST)
நேற்று தீபா கணவர் மாதவன் திடீரென களமிறங்க காரணம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பேரம் பேசப்பட்டதுதான் காரணம் கூறப்படுகிறது.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிட முடிவு செய்த பிறகு இரண்டாக இருந்த அதிமுக அணி மூன்று பிரிவாக மாறியது குறிப்பிடத்தக்கது. இதனால் கட்டாயம் அதிமுக வாக்குகள் மூன்றாக சிதறும். இது ஆளும் கட்சிக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும்.
 
இந்நிலையில் தீபாவிடம் ஜெயலலிதா சொத்தில் பங்கு பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தீபா கணவன் திருப்தி அடைந்துள்ளார். ஆனால் மக்கள் செல்வாக்கு உள்ளது எண்ணும் தீபா ரூ.1500 கோடிக்கு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவி இடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது.
 
இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆளும் கட்சி மாதவனை வளைத்து போட்டு, தீபாவுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து அவரை காலி செய்ய ஐடியா கொடுத்துள்ளனர். இதையடுத்து தீபா கணவர் மாதவன் புதிய கட்சி தொடங்கபோவதாக அறிவித்துள்ளார்.
 
தீபா குடும்ப விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து அதிருப்தியில் உள்ள ஆர்.கே. நகர் பொதுமக்கள் தீபாவுக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அடுத்த கட்டுரையில்