மய்யம், மையம் இதில் எது சரியானது? மதன் கார்க்கி விளக்கம்!

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (16:37 IST)
நடிகர் கமல் தனது அரசியல் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிவித்தார். அதன் பின்னர் தனது கட்சியின் பெயருக்கும் அதன் சின்னத்திற்குமான விளக்கத்தையும் அளித்தார். 
அதாவது, தனது கட்சி சின்னத்தில் புதிய தென் இந்திய வரைப்படம் தெரியும், தென் இந்தியாவின் 6 மாநிலங்கள் தெரியும், ஒன்றுபட்ட திராவிட தென் இந்திய மாநிலங்களை இந்த கைகள் குறிக்கும். அதற்கு இடையில் இருக்கும் நட்சத்திரம் உங்களை குறிக்கும். அதாவது மக்களை குறிக்கும். 
 
மய்யம் என்ற பெயர் எதற்கு என கேட்கிறீர்கள். மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி அதான் மய்யம். நீங்கள் லெப்ஃட் அல்லது ரைட்டா என்று கேட்கிறார்கள். அதற்கு சேர்த்துதான் மய்யம் என்று பெயர் வைத்துள்ளேன் என விளக்கம் அளித்தார். 
 
நாம் வழக்கமாக மையம் என்று எழுதிதான் பழகியுள்ளோம். ஆனால் தற்போது கமல் மய்யம் குறிப்பிட்டுள்ளதால் மய்யம், மையம் இதி எது சரியானது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியரும் ஆன மதன் கார்க்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, இரு சொற்களும் ஒரே பொருளை கொண்டதுதான். இரண்டிற்கும் சென்டர் என்று பொருள். தமிழில் சொற்களை எழுவதற்கு நெகிழ்வு இருப்பதால் இதனை எப்படி வேண்டுமானலும் எழுதலாம். இவ்வாறு எழுதுவதற்கான விதி தொல்காப்பியத்தில் இருப்பதால் மையம், மய்யம் இரண்டும் சரியனாதுதான் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்