தமிழகத்தில் உள்ள முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றிவர் மதன் ரவிச்சந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் சேர்ந்து அதிலிருந்து விலகினார்.
சில நாட்கள் மீடியாவில் இருந்து விலகியிருந்த அவர் சமீபத்தில் சொந்தமான மார்ஸ் தமிழ் நாடு என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார்.
அதில், மதன் ரவிச்சந்திரன் நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பல பத்திரிகையாளர்கள் சிக்கினார். அவர்கள் பணம் மற்றும் மது பாட்டில்கள் வாங்கிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில், பிரபல மீடியா தொகுப்பாளர் மாதேஷூம் இதில் சிக்கி இருந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் ''நான் நிதானம் தெரியாமல் அந்த வீடியோவில் தெரிவித்ததெல்லாம் உண்மைதான், எனக்கு பணம் கொடுத்தார்கள் நான் வாங்கியதும் உண்மைதான், இதற்காக நாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ''என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு டுவீட் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ''மதன் உன் திருமணம் ஒரு காதல் திருமணமாம் உங்க மனைவி வீட்டில் எந்த நகையும் போட்டு அனுப்பல னு குடி போதைல அப்பப்ப உன் மனைவியையே திட்டுவியாமே ? அப்படி இருக்கும் பட்சத்தில் நீ எந்த நகையை அடமானம் வச்சு நீ இந்த Sting ஆப்ரேஷன் நடத்த செலவு பண்ண அதுக்கு ரசீது இருந்தா வெளியிடுடா பார்ப்போம்.
நீ இந்த Sting ஆப்ரேஷன் ஒரு வருஷம் பிளான் பண்ணி எல்லாரையும் சிக்க வச்சிருக்க இன்னும் கூடிய சீக்கிரத்துல உன் வண்டவாளம் தண்டவாளத்தை நான் இழுத்து நடுத்தெருவுல விடுறேன் இரு..என்று வாய்ஸ் ஆப் சவுக்கு என்ற டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.