அதிமுக நீட் மசோதாவை விட இது வித்தியாசமானது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (10:52 IST)
தமிழக சட்டமன்றத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் வித்தியாசமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக கூறியிருந்த நிலையில் நேற்று இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” ஆட்சிக்கு வந்து முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என்றுதான் கூறினோம். அதன்படி தற்போது தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட மசோதாவுக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்