மத்திய அரசிடம் இருந்து ரூ.5000 வாங்கி கொடுங்கள்: அண்ணாமலைக்கு மா சுப்பிரமணியன் பதில்

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:17 IST)
மத்திய அரசிடம் ரூபாய் 5000 வாங்கித் தந்தால் நாங்கள் அதனை வெள்ள நிவாரணமாக மக்களுக்கு அளிக்க தயாராக இருப்பதாக அண்ணாமலைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 5000 நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து வெள்ள நிவாரண நிதியை அதனை அவர்கள் வாங்கி தந்தால் அந்த பணத்திலிருந்து வெள்ள நிவாரண உதவியாக ரூபாய் 5000 பொதுமக்களுக்கு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்