இதுகுறித்து நவம்பர் 19ஆம் தேதி 11 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் கூட இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாகவும் இந்த கூட்டம் முடிந்த பிறகு வெள்ள நிவாரண நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது