வருகிறது முழு சந்திர கிரகணம்; எங்கே? எப்போது காணலாம்?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (08:37 IST)
சமீபத்தில் சூரிய கிரகணம் தோன்றிய நிலையில் அடுத்த மாதத்தில் சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நிலவுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி நேர்க்கோட்டில் பயணிக்கும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சமய நம்பிக்கையில் இது நிலவை பாம்பு விழுங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 6.20 மணிக்கு முடிவடையும். இந்த சமயத்தில் இரவு நேரமாக உள்ள மற்ற நாடுகளில் கிரகணத்தை முழுமையாக காண முடியும்.

ALSO READ: 91 பேரை காவு கொண்ட குஜராத் தொங்கு பாலம் விபத்திற்கு காரணம் என்ன?

மாலை 4.30 மணியளவில் முழு கிரகணம் நிகழும் என்றாலும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் அந்த சமயம் நிலவு தோன்றாது என்பதால் காண இயலாது. 6 மணியளவில் அடிவானத்தில் நிலவு தோன்றும் நிலையில் சந்திர கிரகணத்தின் முடிவை காண இயலும்.

இந்த சந்திர கிரகணத்தை காண கண்ணாடி அணிய தேவையில்லை என்றும், வெறும் கண்களாலேயே காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்