விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick
வியாழன், 16 மே 2024 (14:55 IST)
ஈழப்போரில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் விடுதலைப்புலிகள் சார்பில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்படுவதில்லை என அவரது சகோதரர் கூறியுள்ளார்.



2009ம் ஆண்டு இலங்கையில் தனி ஈழத்திற்கான போர் விடுதலை புலிகள் அமைப்பினால் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த சமயம். அப்போது மே மாதத்தில் விடுதலை புலிகள் உடனான போரில் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதை தொடர்ந்து ஆண்டுதோறும் மே-18ல் பிரபாகரன் மறைந்த நாளில் அவருக்கு வீரவணக்க நாளை பல நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு அமைப்புகளும் அனுசரித்து வருகின்றன. ஆனால் பிரபாகரன் சாகவில்லை என்ற கருத்தும் சிலரிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரபாகரனின் அண்ணன் மனோகரன் “பிரபாகரனுக்கு முதல் முறையாக வீரவணக்க நாளை டென்மார்க்கில் நடத்த உள்ளோம். பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்த நாளில் வீரவணக்க நாள் நடைபெறுகிறது.

அவரது பெயரால் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு அவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ வீரவணக்கம் செலுத்தியதில்லை” என தெரிவித்துள்ளார். இதனால் விடுதலைப்புலிகள் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புவதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்